புரளி



‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில்
ஏன் இத்தனை தீமைகள்?’

இறைவன் பதிலிறுத்தான்:

‘உலகம் என்னில் இருக்கிறது;
உலகத்தில் நான் இல்லை’

‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர்

‘உலகமும் மனிதனும் எமது படைப்பு;
கற்பிதமும் சதியுமாக
அவன் உருவாக்கிய உலகம்,
அவனது படைப்பு!

அழியா நிசமொன்று இது போல
உம்மால் சொல்ல ஆகுமா?

தலைவன் வினவ யான் செப்பினேன்:

மனிதன் உருவாக்கிய புது உலகிலே ...

‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன;
புரளிகளினுள் ஆள் இல்லை’

எங்குமே இல்லை!


ஆக்கம்: கவிஞர். புதுயுகன்




கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Super

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பின் குவியல்!

பெற்றோர்மை!