இடுகைகள்

விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்!

படம்
பொல்லாத கோரனா… நீ மனித சமூகத்தின் மீது கல்லெறிந்து நிற்கின்ற கயவன்!  எங்கள் புன்னகையை கொள்ளையிட வந்த கள்வன் வானத்தில் வட்டமிடும் வண்ணப் புறாக்களாய் இருந்த எங்களை எலி வளைக்குள் அடைத்து விட்ட துயரன் நீ தறி கெட்டு ஓடுவதால் எங்கள் வாழ்க்கை வண்டியினை குடம் சாய்த்து விடலாம் என்று நினைத்து விட்ட மூடன்! நுண்ணோக்கியில் பார்த்தால் தான் உன் கோர முகமே தெரியும்… ஆனாலும் மனிதனை பின்னோக்கி தள்ள நீ பிரயத்தனப் பட்டுவிட்டாய் கடவுளர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க…. விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்! தடுப்பூசி எனும் தண்டம் கொண்டு உனையழிக்க… மனிதம் மீண்டும் இன்பப் பறவைகளாய் சிறகடிக்க! ஆக்கம்: கவிராஜன்

உலகின் ஒரே மதம்... நம்பிக்கை!!

படம்

மறதி அணிக !!

படம்
மறதி அணிக !! கசடறக் கற்ற நெளிவு சுளிவுகளின் கசடுகள் கழிய - மறதி அணிக... இன்றையக் கணக்கை இரவில் கரைத்து.. நாளைய நாளை புதிதாய்த் திறக்க - மறதி அணிக!! மடிந்த சண்டைகள், முடிந்த காதல், முடியாத முகத்திதி மூன்றும் எதிர் வந்தால் - மறதி அணிக சாதனையின் கர்வம், சோதனையின் தொய்வு இரண்டும் வேகத்தடை - மறதி அணிக எதிரியின் பலத்தை மனதில் பின்வைக்க பலவீனம் மாற்றி உம் பலத்தை முன்வைக்க அவ்வப்போது, ஆங்காங்கே - மறதி அணிக கற்கும் போது கற்ற திமிரும் கற்பிக்கும் போது கல்லாத துறையும் தற்கொலையின் தம்பிகள் - மறதி அணிக பேரின்பப் பயணத்தில் சிற்றின்பச் சாலையையும் சிற்றின்பச் சாலையில் பேரின்பப் பிரச்சாரத்தையும் மறந்தும் செய்யாமல் - மறதி அணிக சிறுதீமைகளாம் புகை மதுவும் பெருந்தீமைகளாம் பொறாமை புரளியும் தாண்டிக் கடக்க - மறதி அணிக பிறர் செய்த தீமையும் நீர் செய்த நன்மையும் நீங்காமல் நின்றால் - மறதி அணிக முடியாது தெரியாது மாறாது என்ற எதிர்மறைகளை எதிர்கொண்ட மறுநொடியே  -  மறதி அணிக நிறைந்த வழியும் நினைவுகள் மாளிகையின் ஒற்றைச் சாளரம் மறதி...

நிலா...அழகில் இது வெண்தாமரை!

படம்
இரவின் நற்சிந்தனை! வானுக்கு வந்த வளமையான கற்பனை! அழகில் இது வெண்தாமரை! பழகினால் இது சொல்லித் தரும் காதலை… குணத்தில் குன்றென நிற்கும்… இதன் குளிர் பார்வையில் பெய்திடும் பூ மழை! களிப்போடு வந்து…  மனிதரின் களைப்பினை போக்கிடும் இனிமை !  முனைப்போடு நாளும் முன்னே வந்திடும் கடமை! விளக்கில்லாத வீடுகள், வீதிகள் இதன் ஓளியில் குளித்திருப்பது மந்திர மகிமை இது இரவு ராஜனின் மகுடத்தில் அமைந்த கோஹினூர் வைரம்! நிலா நின்றெரியும் வரை பூமியில் நீளாது… துயரம்! ஆக்கம்: கவிராஜன்

கொலைகாரக் கொரோனா... நீ நாடு விட்டு நாடு தாவும் மாயாவி!

படம்
கொலைகாரக் கொரோனா! நீ… நாடு விட்டு நாடு தாவும் மாயாவி! மனித உயிர்களை மலிவாக்கி விட்ட மரண வியாபாரி அண்டை வீட்டுக்காரனையும் அயலானாய் ஆக்கி விட்ட அருபம்! எமனை விட கொடியது கண்ணுக்குத் தெரியாத உன் சொரூபம்! மனித சமூகம்… உன்னை சீக்கிரம் கை கழுவ வேண்டும்.! ‘ `அச்’ என்று யாராவது தும்மினாலும் நோய் பரவி விடுமோ என்ற அச்சம்! `பக்” என்று இருமினாலும் கொரோனா தொற்றி விடுமோ.. என பதை பதைக்கிறது நெஞ்சம்! இத்தாலியில் நீ மரணத்தின் கூட்டாளி… இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்காத கொடிய  கோமாளி! அமெரிக்காவிலும் அடி எடுத்து வைத்து விட்ட சீனாவின் இறக்குமதியே.. இந்தியாவுக்குள்ளும் வந்து விட்ட சிறுமதியே மனிதம் போக வேண்டியது வெகு தூரம்! சின்னஞ் சிறு வைரஸே...  உன்னால் தடைப்படாது அது ஒரு போதும்! புற்றீசல் போல் கிளம்பி விட்டாய்.. உன் வாழ்வு சில தினங்களில் முடியப் போகிறது என்பதனை...  ஏனோ நீ மறந்து விட்டாய்! ஆக்கம்: கவிராஜன்

`கொரோனா... ஒரு வினோத வைரஸ்'

படம்
கண்ணுக்குத் தெரியாத கயமை! உயிருக்கு உலை வைக்கும் பகைமை! அருகில் இருந்து தும்மினாலும் தொற்றிக் கொள்ளும்.. யாராவது இருமினால்...  எட்டிச்செல்லும்! தூரத்தில் இருந்தால் மட்டுமே இது விட்டுச்செல்லும்! அடிக்கடி கை கழுவக் கற்றுக்கொள்ளும்! ஆம்! இது ஒரு வினோத வைரஸ்! ஆணினத்தை அதிகம் தாக்குகிறது! பெண்களை குறைவாக... குழந்தைகளை இன்னும் குறைவாக... இது தேசங்களெங்கும் பரவி விட்ட நாசம்! தெய்வங்களும் பயந்து ஒதுங்கி விட்ட துவேஷம்! இதன் கட்டற்ற தன்மை... அஞ்ஞரனிகளுக்கு   புரியவில்லை விஞ்ஞரனிகளுக்கும் ஏனோ விளங்கவில்லை! மனித குலத்திற்கு இந்நோயின் தடுப்பாற்றால் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்! தடுப்பூசி வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்! என்கிறது அறிவியல்! அமெரிக்கா சீனாவைக் குறை சொல்கிறது.. இந்தியா அமெரிக்காவை, இத்தாலியைக் குறை சொல்கிறது கொண்ட பாசங்கள் புலம்புகின்றன.. தேசங்களும் நடுங்குகின்றன!   கோர முகம் கொண்ட கொரோனா.. நீ மனித இனத்தை அழிக்க வந்த மாறனா? அல்லது எங்களுக்கெல்லாம் சுக...

கொரோனாவே போய்விடு !!

படம்
கொரோனாவே போய் விடு! வையகத்தை நடுங்க வைத்தது போதும்... சீனப் பட்டினை சிங்காரமாய் தந்த நாகரீக பூமியிலிருத்து வந்த நய வஞ்சக வைரஸே! நீ மனிதர்களை துரத்தாதே என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். மனித உயிர்கள் என்ன அத்தனை மலிவா? உன் போன்ற மனசாட்சியில்லாத உயிர் கொல்லிக்கு அத்தனை துணிவா? இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா இங்கெல்லாம் பேயாட்டம் போட்டு விட்ட திறந்த வீட்டுக்குள் நுழையும் நாயாட்டம். இந்தியாவுக்குள் நுழைந்தாயோ? மாலைகளில்.. மனிதக் கடலாய் மாறி விடும் எங்களது மெரினா கடற்கரை.. கலகலப்பில்லாத பாலை வனமாய் காட்சியளிக்கிறது தஞ்சை பெருவுடையாரும் ஏழு மலையானும் மதுரை மீனாட்சியும் கூட எங்களுக்கு தரிசனம் தராமல் கோவிலுக்குள்ளேயே முடங்கி விட்டனர். நிலவுக்குப் போய் வந்தென்ன.. செவ்வாயினை சீண்டியென்ன… கொரோனா வைரஸை கொல்வது எப்படி என்ற வித்தை மனிதன் இன்னும் கற்றபாடில்லை புன்னகை மறந்து பல நாட்களாயிற்று ! வீடுகளுக்குள் அடைந்து சில நாட்களாயிற்று!          ...