விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்!
பொல்லாத கோரனா…
நீ மனித சமூகத்தின்
மீது கல்லெறிந்து நிற்கின்ற கயவன்!
எங்கள் புன்னகையை கொள்ளையிட வந்த கள்வன்
வானத்தில் வட்டமிடும்
வண்ணப் புறாக்களாய் இருந்த எங்களை
எலி வளைக்குள்
அடைத்து விட்ட துயரன்
நீ தறி கெட்டு
ஓடுவதால் எங்கள் வாழ்க்கை வண்டியினை
குடம் சாய்த்து
விடலாம் என்று நினைத்து விட்ட மூடன்!
நுண்ணோக்கியில் பார்த்தால் தான் உன் கோர முகமே தெரியும்…
ஆனாலும் மனிதனை
பின்னோக்கி தள்ள நீ பிரயத்தனப் பட்டுவிட்டாய்
கடவுளர்களும்
கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க….
விஞ்ஞானிகள்
தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்!
தடுப்பூசி எனும்
தண்டம் கொண்டு உனையழிக்க…
மனிதம் மீண்டும்
இன்பப் பறவைகளாய் சிறகடிக்க!
ஆக்கம்: கவிராஜன்
ஆக்கம்: கவிராஜன்

கருத்துகள்