நிலா...அழகில் இது வெண்தாமரை!




இரவின் நற்சிந்தனை!

வானுக்கு வந்த வளமையான கற்பனை!

அழகில் இது வெண்தாமரை!

பழகினால் இது சொல்லித் தரும் காதலை…

குணத்தில் குன்றென நிற்கும்…
இதன் குளிர் பார்வையில் பெய்திடும் பூ மழை!

களிப்போடு வந்து…
 மனிதரின் களைப்பினை போக்கிடும் இனிமை !

 முனைப்போடு நாளும் முன்னே வந்திடும் கடமை!

விளக்கில்லாத வீடுகள், வீதிகள் இதன் ஓளியில் குளித்திருப்பது
மந்திர மகிமை

இது இரவு ராஜனின் மகுடத்தில் அமைந்த கோஹினூர் வைரம்!

நிலா நின்றெரியும் வரை பூமியில் நீளாது… துயரம்!


ஆக்கம்: கவிராஜன்






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரளி

அன்பின் குவியல்!

பெற்றோர்மை!