`கொரோனா... ஒரு வினோத வைரஸ்'
கண்ணுக்குத் தெரியாத கயமை! உயிருக்கு உலை வைக்கும் பகைமை! அருகில் இருந்து தும்மினாலும் தொற்றிக் கொள்ளும்.. யாராவது இருமினால்... எட்டிச்செல்லும்! தூரத்தில் இருந்தால் மட்டுமே இது விட்டுச்செல்லும்! அடிக்கடி கை கழுவக் கற்றுக்கொள்ளும்! ஆம்! இது ஒரு வினோத வைரஸ்! ஆணினத்தை அதிகம் தாக்குகிறது! பெண்களை குறைவாக... குழந்தைகளை இன்னும் குறைவாக... இது தேசங்களெங்கும் பரவி விட்ட நாசம்! தெய்வங்களும் பயந்து ஒதுங்கி விட்ட துவேஷம்! இதன் கட்டற்ற தன்மை... அஞ்ஞரனிகளுக்கு புரியவில்லை விஞ்ஞரனிகளுக்கும் ஏனோ விளங்கவில்லை! மனித குலத்திற்கு இந்நோயின் தடுப்பாற்றால் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்! தடுப்பூசி வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்! என்கிறது அறிவியல்! அமெரிக்கா சீனாவைக் குறை சொல்கிறது.. இந்தியா அமெரிக்காவை, இத்தாலியைக் குறை சொல்கிறது கொண்ட பாசங்கள் புலம்புகின்றன.. தேசங்களும் நடுங்குகின்றன! கோர முகம் கொண்ட கொரோனா.. நீ மனித இனத்தை அழிக்க வந்த மாறனா? அல்லது எங்களுக்கெல்லாம் சுக...

கருத்துகள்
நம்பிக்கையோடு நாமும் அதைச் செய்யலாமே என "நச்" எனச் சொல்கிறது
இந்த நான்கு வரிக் கவிதை!