இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்!

படம்
பொல்லாத கோரனா… நீ மனித சமூகத்தின் மீது கல்லெறிந்து நிற்கின்ற கயவன்!  எங்கள் புன்னகையை கொள்ளையிட வந்த கள்வன் வானத்தில் வட்டமிடும் வண்ணப் புறாக்களாய் இருந்த எங்களை எலி வளைக்குள் அடைத்து விட்ட துயரன் நீ தறி கெட்டு ஓடுவதால் எங்கள் வாழ்க்கை வண்டியினை குடம் சாய்த்து விடலாம் என்று நினைத்து விட்ட மூடன்! நுண்ணோக்கியில் பார்த்தால் தான் உன் கோர முகமே தெரியும்… ஆனாலும் மனிதனை பின்னோக்கி தள்ள நீ பிரயத்தனப் பட்டுவிட்டாய் கடவுளர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க…. விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்! தடுப்பூசி எனும் தண்டம் கொண்டு உனையழிக்க… மனிதம் மீண்டும் இன்பப் பறவைகளாய் சிறகடிக்க! ஆக்கம்: கவிராஜன்

உலகின் ஒரே மதம்... நம்பிக்கை!!

படம்

மறதி அணிக !!

படம்
மறதி அணிக !! கசடறக் கற்ற நெளிவு சுளிவுகளின் கசடுகள் கழிய - மறதி அணிக... இன்றையக் கணக்கை இரவில் கரைத்து.. நாளைய நாளை புதிதாய்த் திறக்க - மறதி அணிக!! மடிந்த சண்டைகள், முடிந்த காதல், முடியாத முகத்திதி மூன்றும் எதிர் வந்தால் - மறதி அணிக சாதனையின் கர்வம், சோதனையின் தொய்வு இரண்டும் வேகத்தடை - மறதி அணிக எதிரியின் பலத்தை மனதில் பின்வைக்க பலவீனம் மாற்றி உம் பலத்தை முன்வைக்க அவ்வப்போது, ஆங்காங்கே - மறதி அணிக கற்கும் போது கற்ற திமிரும் கற்பிக்கும் போது கல்லாத துறையும் தற்கொலையின் தம்பிகள் - மறதி அணிக பேரின்பப் பயணத்தில் சிற்றின்பச் சாலையையும் சிற்றின்பச் சாலையில் பேரின்பப் பிரச்சாரத்தையும் மறந்தும் செய்யாமல் - மறதி அணிக சிறுதீமைகளாம் புகை மதுவும் பெருந்தீமைகளாம் பொறாமை புரளியும் தாண்டிக் கடக்க - மறதி அணிக பிறர் செய்த தீமையும் நீர் செய்த நன்மையும் நீங்காமல் நின்றால் - மறதி அணிக முடியாது தெரியாது மாறாது என்ற எதிர்மறைகளை எதிர்கொண்ட மறுநொடியே  -  மறதி அணிக நிறைந்த வழியும் நினைவுகள் மாளிகையின் ஒற்றைச் சாளரம் மறதி...

நிலா...அழகில் இது வெண்தாமரை!

படம்
இரவின் நற்சிந்தனை! வானுக்கு வந்த வளமையான கற்பனை! அழகில் இது வெண்தாமரை! பழகினால் இது சொல்லித் தரும் காதலை… குணத்தில் குன்றென நிற்கும்… இதன் குளிர் பார்வையில் பெய்திடும் பூ மழை! களிப்போடு வந்து…  மனிதரின் களைப்பினை போக்கிடும் இனிமை !  முனைப்போடு நாளும் முன்னே வந்திடும் கடமை! விளக்கில்லாத வீடுகள், வீதிகள் இதன் ஓளியில் குளித்திருப்பது மந்திர மகிமை இது இரவு ராஜனின் மகுடத்தில் அமைந்த கோஹினூர் வைரம்! நிலா நின்றெரியும் வரை பூமியில் நீளாது… துயரம்! ஆக்கம்: கவிராஜன்