கொரோனாவே போய்விடு !!





கொரோனாவே போய் விடு!

வையகத்தை நடுங்க வைத்தது போதும்...

சீனப் பட்டினை
சிங்காரமாய் தந்த
நாகரீக பூமியிலிருத்து
வந்த
நய வஞ்சக வைரஸே!

நீ மனிதர்களை
துரத்தாதே என
மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

மனித உயிர்கள் என்ன
அத்தனை மலிவா?

உன் போன்ற
மனசாட்சியில்லாத
உயிர் கொல்லிக்கு
அத்தனை துணிவா?

இத்தாலி
ஸ்பெயின்
அமெரிக்கா
இங்கெல்லாம்
பேயாட்டம் போட்டு விட்ட
திறந்த வீட்டுக்குள்
நுழையும் நாயாட்டம்.
இந்தியாவுக்குள்
நுழைந்தாயோ?

மாலைகளில்..
மனிதக் கடலாய் மாறி விடும்
எங்களது மெரினா கடற்கரை..
கலகலப்பில்லாத
பாலை வனமாய் காட்சியளிக்கிறது

தஞ்சை பெருவுடையாரும்
ஏழு மலையானும்
மதுரை மீனாட்சியும் கூட
எங்களுக்கு
தரிசனம் தராமல்
கோவிலுக்குள்ளேயே முடங்கி விட்டனர்.

நிலவுக்குப் போய் வந்தென்ன..
செவ்வாயினை சீண்டியென்ன…
கொரோனா வைரஸை
கொல்வது எப்படி
என்ற வித்தை
மனிதன் இன்னும் கற்றபாடில்லை

புன்னகை மறந்து பல நாட்களாயிற்று !
வீடுகளுக்குள் அடைந்து சில நாட்களாயிற்று!
                                           
அடிக்கடி கைகழுவதுவதும்…
தொலைக்காட்சியில்
தொடரலையினை 
பார்பதும், கேட்பதும்தான்
வாடிக்கையாயிற்று!

சக மனிதனோடு
முகத்துக்கு முகம்
பார்த்துப் பேசி
நாட்கள் சில நகர்ந்து போனது!
அன்றாட வாழ்க்கை உலர்ந்து போனது!

கடைசியாய் ஒரு விண்ணப்பம்!

சற்றும் தயங்காமல்
 சாலையோரங்களில் உமிழ்தல்…
சத்தமாய் வாய்பிளந்து தும்மல், இருமல்
சோப்பிடாமல் கை கழுவுதல்
அல்லது
கைகழுவாமல் உண்ணுதல்…
ஈ மொய்க்கும் பண்டங்களை
 லாவகமாய் வாங்கி நுகர்தல்..

இந்த இதிகாச காலப் பழக்கங்களை..
இன்றோடு  நாம் கைவிட வேண்டும்!

“வெப்பபூமியில் .. வைரஸ் தப்பாது” என்ற
வரட்டு வாதத்தினை விட்டொழிக்க வேண்டும்!
 அறிவாளர்கள் சொல்வதை ஆராயாமல்
பின்பற்ற வேண்டும்

மனித இனத்தின் சீர்குலைக்கும்
கொரோனாவை
வேறருக்க இது போதும்!

இன்னொரு வைரஸ் 
இந்தியாவுக்குள் வாராது
எப்போதும்!


ஆக்கம்: கவிராஜன்








கருத்துகள்

உமாராணி இவ்வாறு கூறியுள்ளார்…
பழைமை நினைவூட்டும் அசுரன்
புதுமை உயிரூட்டும் சூரன்
அரக்கர்களை அழிக்கும்
வீரக்களம் நம் தமிழ்மண்!
உமாராணி இவ்வாறு கூறியுள்ளார்…
பழைமை நினைவூட்டும் அசுரன்
புதுமை உயிரூட்டும் சூரன்
அரக்கர்களை அழிக்கும்
வீரக்களம் நம் தமிழ்மண்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
👌👌👌👌

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரளி

அன்பின் குவியல்!

பெற்றோர்மை!