இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்!

படம்
வண்ண நீரினை சுமந்து செல்லும் வானூரின் வைகை இதயத்தின் ஓளிந்திருக்கும் காதலை… வரைந்து பார்த்தால் கிடைத்திடும் இப்படியொரு இனிமை… இளமை… இது அறிஞனின் வார்த்தைகள் போல் ஆயிரம் முகம் காட்டும்! கவிஞனின் வார்த்தைகள் போல் ஒளிந்து மறைந்து பின் தோன்றி   சுகம் காட்டும்! இது இறைவன் எனும் புலவன் எழுதிய ஏழு வரி திருக்குறள்! பூக்களின் அழகினை புடம் போட்டுச் செய்த ஆகாய அருள்! இது பறந்து செல்லும் ஓரு தேவ பறவையின் ஆனந்தச் சிறகு அதனால்தான்… சில கணங்களிலேயே காணாமல் போய் விடுகிறது! இது மறந்து போய் விடாத பால்ய நினைவுகள் அதனால்தான் … எப்போதும் வண்ணங்களாகவே காட்சியளிக்கிறது! இது அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்! இது புன்னகை மாறாத தேவ உதடுகளின் ஆனந்தச் சொல்! காலகாலமாய் காட்சிக்கு வரும் களிப்பான நாடகம் எழுதி மேடையேற்றியவன் யார் என்பது பூடகம்! இது பூக்கள் வண்ணங்களைக் கற்றுக் கொண்ட ஆசிரியன் வானில் வந்து நின்ற பொழுதில் பூமியெங்கும் அன்பின் பூச்சொரியும் ஆனந்தன் ஆக்கம்: கவிராஜன்

காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்!

படம்
அன்பின் விழாக்கோலம்! காதலைக் கற்றுத்தரும் நித்ய பாடம்... காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்! சோலைகள் என்பன.. பூமியில் ஆங்கே திட்டுத்திட்டாய் தெறித்திருக்கும் சொர்க்க லோகம்! இயற்கையின் தேசத்தினை ஆண்டு வருபவள் இந்த இளவரசி! இவை செடிகள் பெற்ற ஞானம் அன்பினை அனுதினமும் வளர்க்கும் இந்த யாகம்! உயர்ந்த மரங்களில் பூத்திருக்கும் பூக்கள் இன்னொரு வானவில்லாய் தோன்றும் ஒற்றைப் பூக்கள் குறுநகை என்றால்.. கொத்தாய் மலர்ந்த மலர்கள் வளர்ந்து கொண்டே போகும் புன்னகை! பெண்களும் தாம் வேண்டிப் பெற வேண்டிய அழகினைப் பெற்றதால்தான் பூக்களை   கூந்தலில் அணிந்து மகிழ்கின்றனர் இவை கடைத்தெருவுக்கு வந்தாலும்.. கலைச்செறுக்குள்ள கவிஞனைப் போல தன்னை வித்தியாசப் படுத்திக்கொள்ளும் வாசனை என்ற கண்ணுக்கு தெரியாத விளம்பரப் பலகையினை இவை கடைத்தெருவெங்கும் வைத்து விடும் ஆக்கம்: கவிராஜன்

புரளி

படம்
‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில் ஏன் இத்தனை தீமைகள்?’ இறைவன் பதிலிறுத்தான்: ‘உலகம் என்னில் இருக்கிறது; உலகத்தில் நான் இல்லை’ ‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர் ‘உலகமும் மனிதனும் எமது படைப்பு; கற்பிதமும் சதியுமாக அவன் உருவாக்கிய உலகம், அவனது படைப்பு! அழியா நிசமொன்று இது போல உம்மால் சொல்ல ஆகுமா? தலைவன் வினவ யான் செப்பினேன்: மனிதன் உருவாக்கிய புது உலகிலே ... ‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன; புரளிகளினுள் ஆள் இல்லை’ எங்குமே இல்லை! ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

பெற்றோர்மை!

படம்
ஏழ்கடல் சூழ்ந்த எழிலாம் உலகில் வாழ்வது நிறைவது வளர்ப்பின் முறையால் ஆழ்மன நூலால் ஆகிடும் எண்ணம் வாழ்வாம் ஆடையை வளர்ப்பே நெய்யும் வேகம் கடந்த விரிந்த அறிவால் தாகம் தணிந்த தெளிவுடை மனதால்  போகும் பாதையில் பிள்ளையும் வளர ஆகும் தந்தை அன்னையின் அறிவு  பெற்றோர் வீட்டில் போடும் சட்டம் பிள்ளைகள் அறிவின் வரைமுறை விட்டம் தொல்லைகள் அல்ல கொடுங்கோல் புரிய நல்லவை விளையும் எல்லைகள் விரிய வளர்ந்த மரத்தில் வம்பாய் நீரிடல் தளர்ந்த மதியில் தோன்றும் திட்டம் வளர்ந்த பின்னர் வளவள வென்றே உளரல் போன்ற உரைகள் வேண்டாம் திடமாம் மனதின் தன்னம் பிக்கை நடமே இடுமே நல்லிடம் தந்தே மடமே வளர்ந்த மக்களை மிதித்தல் குடத்தின் நிறைபோல் கடலாய் விரிக சிந்தையில் நிற்கும் சிறந்த பெற்றோர் விந்தை உலகில் வாரிசு களையே சந்திர இதமாய் சத்தியத் துணையாய் அந்தியின் அழகாய் அரவணைப் பவரே!                   ஆக்கம்: கவிஞர். புதுயுகன்