இடுகைகள்

கொலைகாரக் கொரோனா... நீ நாடு விட்டு நாடு தாவும் மாயாவி!

படம்
கொலைகாரக் கொரோனா! நீ… நாடு விட்டு நாடு தாவும் மாயாவி! மனித உயிர்களை மலிவாக்கி விட்ட மரண வியாபாரி அண்டை வீட்டுக்காரனையும் அயலானாய் ஆக்கி விட்ட அருபம்! எமனை விட கொடியது கண்ணுக்குத் தெரியாத உன் சொரூபம்! மனித சமூகம்… உன்னை சீக்கிரம் கை கழுவ வேண்டும்.! ‘ `அச்’ என்று யாராவது தும்மினாலும் நோய் பரவி விடுமோ என்ற அச்சம்! `பக்” என்று இருமினாலும் கொரோனா தொற்றி விடுமோ.. என பதை பதைக்கிறது நெஞ்சம்! இத்தாலியில் நீ மரணத்தின் கூட்டாளி… இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்காத கொடிய  கோமாளி! அமெரிக்காவிலும் அடி எடுத்து வைத்து விட்ட சீனாவின் இறக்குமதியே.. இந்தியாவுக்குள்ளும் வந்து விட்ட சிறுமதியே மனிதம் போக வேண்டியது வெகு தூரம்! சின்னஞ் சிறு வைரஸே...  உன்னால் தடைப்படாது அது ஒரு போதும்! புற்றீசல் போல் கிளம்பி விட்டாய்.. உன் வாழ்வு சில தினங்களில் முடியப் போகிறது என்பதனை...  ஏனோ நீ மறந்து விட்டாய்! ஆக்கம்: கவிராஜன்

`கொரோனா... ஒரு வினோத வைரஸ்'

படம்
கண்ணுக்குத் தெரியாத கயமை! உயிருக்கு உலை வைக்கும் பகைமை! அருகில் இருந்து தும்மினாலும் தொற்றிக் கொள்ளும்.. யாராவது இருமினால்...  எட்டிச்செல்லும்! தூரத்தில் இருந்தால் மட்டுமே இது விட்டுச்செல்லும்! அடிக்கடி கை கழுவக் கற்றுக்கொள்ளும்! ஆம்! இது ஒரு வினோத வைரஸ்! ஆணினத்தை அதிகம் தாக்குகிறது! பெண்களை குறைவாக... குழந்தைகளை இன்னும் குறைவாக... இது தேசங்களெங்கும் பரவி விட்ட நாசம்! தெய்வங்களும் பயந்து ஒதுங்கி விட்ட துவேஷம்! இதன் கட்டற்ற தன்மை... அஞ்ஞரனிகளுக்கு   புரியவில்லை விஞ்ஞரனிகளுக்கும் ஏனோ விளங்கவில்லை! மனித குலத்திற்கு இந்நோயின் தடுப்பாற்றால் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்! தடுப்பூசி வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்! என்கிறது அறிவியல்! அமெரிக்கா சீனாவைக் குறை சொல்கிறது.. இந்தியா அமெரிக்காவை, இத்தாலியைக் குறை சொல்கிறது கொண்ட பாசங்கள் புலம்புகின்றன.. தேசங்களும் நடுங்குகின்றன!   கோர முகம் கொண்ட கொரோனா.. நீ மனித இனத்தை அழிக்க வந்த மாறனா? அல்லது எங்களுக்கெல்லாம் சுக...

கொரோனாவே போய்விடு !!

படம்
கொரோனாவே போய் விடு! வையகத்தை நடுங்க வைத்தது போதும்... சீனப் பட்டினை சிங்காரமாய் தந்த நாகரீக பூமியிலிருத்து வந்த நய வஞ்சக வைரஸே! நீ மனிதர்களை துரத்தாதே என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். மனித உயிர்கள் என்ன அத்தனை மலிவா? உன் போன்ற மனசாட்சியில்லாத உயிர் கொல்லிக்கு அத்தனை துணிவா? இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா இங்கெல்லாம் பேயாட்டம் போட்டு விட்ட திறந்த வீட்டுக்குள் நுழையும் நாயாட்டம். இந்தியாவுக்குள் நுழைந்தாயோ? மாலைகளில்.. மனிதக் கடலாய் மாறி விடும் எங்களது மெரினா கடற்கரை.. கலகலப்பில்லாத பாலை வனமாய் காட்சியளிக்கிறது தஞ்சை பெருவுடையாரும் ஏழு மலையானும் மதுரை மீனாட்சியும் கூட எங்களுக்கு தரிசனம் தராமல் கோவிலுக்குள்ளேயே முடங்கி விட்டனர். நிலவுக்குப் போய் வந்தென்ன.. செவ்வாயினை சீண்டியென்ன… கொரோனா வைரஸை கொல்வது எப்படி என்ற வித்தை மனிதன் இன்னும் கற்றபாடில்லை புன்னகை மறந்து பல நாட்களாயிற்று ! வீடுகளுக்குள் அடைந்து சில நாட்களாயிற்று!          ...

`காதலின் உறைவிடம்'

படம்
காலை போட்ட வண்ண மந்திரம்... வாசனை முந்திடும், இனிமைகள் தந்திடும்,   இயற்கையின் தந்திரம்! காலை எழுதிய சித்திரம் வண்ணக் கோலங்களாய் சிரித்திடும்! காதலின் உறைவிடம், காலையின் பெருமிதம், நட்பாய் குலவிடும், மகிழ்ச்சியே மலர்முகம்! நாளும்.. பூவென்ற புன்னகை செய்திடும் இந்த செடிகள் கற்ற இங்கிதம்!

அன்பின் குவியல்!

படம்
அன்பின் குவியல்! செடி பெற்ற பாராட்டு! வண்ணங்கள் பாடும் தாலாட்டு… வாசனையோ நாசியினை நீராட்டும் இவை செல்விகளும் விரும்பும் அழகின் செவ்வியல்! பாரில் உள்ள நிறங்களையெல்லாம்… இவை போடும் பட்டியல்! வானவில்லும் இறங்கி வந்து வணங்கிச் செல்லும் பண்பியல்! இவை காலையின் அரங்கில் கைதட்டல் பெற்ற கவிதைகள்! பூக்களே பூமியில் .. அன்பின் குவியல்! கவி மந்திரன்  

விரல் நீள ஹிட்லர்

படம்
புகைத்துக் கொல்லும் `நான்கு அங்குல’ தீவிரவாதி.. புற்று நோயின் அழகிய அந்தரங்க காரியதரிசி வெள்ளை உடுத்தி வரும் இவள்.. உண்மையில்  உயிர்களைக் கொள்ளையிடும் ச (ர)ம்பல்  கொள்ளைக்காரி! உதட்டளவில் மட்டும் உறவாடிக் கெடுக்கும் ஒரு போலி நண்பனை ஒத்தவள் இந்த மனப்புகைச்சல் பேர்வழி விரல் இடுக்கில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் இந்த`விலை மகள்` இளைஞனின் உதடுகளை முத்தமிட்டு,,முத்தமிட்டு தரும் சுகம் ஒரு விலைமாதுவின் படுக்கையறையில் கிடைக்கும் அற்ப சுகத்தினை ஒத்தது இளைஞனே... நீ உற்சாகமாய் உறிஞ்சி உள்ளிழுத்துச் சுவைக்கும் நிகோடின் சிறுக சிறுக... உன் உயிர் பருகும் கொடிய விஷம் என்பதை நீ அறிவாயா..? ஆம்... சுவாச மண்டலத்தை சுக்கு நூறாய் உடைத்து விடும் வக்கிர புத்திக்காரன் இந்த சிகரெட்!. ஒரு இனிய நண்பனைப்போல தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உறவாடும் இந்த 'விரல் நீள ஹிட்லர்'. உன் மேல் படிப்படியாய் ஆதிக்கம் செலுத்தி உன்னை அழித்து விடும் ஓர் சர்வாதிகாரி! மனிதன் புகைத்து எரிந்த ஒவ்வொரு சிகரெட்டும் அவனது மொத்...

கானகம் வாழ்ந்த மனிதனின் ‘ஒரு பக்கம்’

படம்
மலைச்சிறுமி தன்னை சுற்றி கட்டிய பட்டுப் பாவாடை போல தக தகக்திருக்கும் மழைக் காடுகள்... அதனூடே கால் பதித்து நடந்த காலங்கள் நலம் என இன்றும் மனம் விசும்புகிறது ஆங்கே ...ஆனைக்கூட்டம் வந்து போன அரவம் தெரிகிறதே! மரங்களின் பட்டைகளை துகிலுரித்து... சானத்தை `பொத்’ `பொதுக்’ என அதன் அருகில் இட்டு ... ஆனைகள் அங்கு தங்கலிட்டுத்தான் சென்றுள்ளன. அது ஒரு இறைமை தோய்ந்திருக்கும் இடை விடாத மவுனம் இசைத்திருப்பது பறவைகள் மட்டுமே ஆங்காங்கே... அதுவே கானகம் என்றால் மிகையல்ல! புலியின் கால்தடத்தை உடன் மண்டியிட்டு அமர்ந்து நோக்கிய போது எனோ புல்லரித்தது.. `உடன் இங்கிருந்து சென்று விடல் நலம்’ என மனித மனம் எச்சரித்தது சாரல்மழை தீரல்கள் சட்டென முகம் நனைக்கும் மயாஜாலம் அங்கே நிகழ்ந்தது.. கானகம் என்னைக்கட்டிக்கொள்ள ஒரு குழந்தை போல நானும் அதனுடன் ஒட்டிக்கொண்டேன் அந்த ஒரு நொடியில் ஏகலைவனின் திடம் பிறந்தது பயம் என்ற பாம்பு புதருக்கு ஓடி மறைந்தது கரடியின் பாதையில் மனிதன் போவதை கரடி கண்ணுறவில்லை மனிதனின் பாதையில் கரடி கவிழ்ந்து நடந்து வந்ததை நானும் கண்ணுறவில்லை முன்னே நடந்த ஆதிவாசி கை கால்ளை காற்றில் வீசி ஒலியெழுப்ப மறு ஒல...