அன்னல் காந்தியின் புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது!!
பூத்துக்
குலுங்கும் பூக்கள் போடுவதோ புன்னகை மந்திரம்!!
அவை ஒயாத
அலையடிக்கும் அன்பின் வாசனை!
தென்றலுக்கு
தலையாட்டும் பூக்கள் அழகின் யோசனை!
பூவினங்கள்...
காலைப்
பெண்ணின் சலிக்காத கருணை
உணர்த்தும்
. அன்பின், காதலின் பெருமை!
அடேயப்பா..
பூவுக்குத்
தான் பொழுதெல்லாம் எத்தனை எத்தனை வேலைகள்?
ஒற்றைப்
பூ காதலின் துடிப்பு !
மாலையாக மாறிவிட்ட பூக்கள் பெற்றுத்
தரும் எவருக்கும் மதிப்பு
பெண்ணின்
கூந்தலில் அமர்ந்த பூவோ பேரன்பின் சிலிர்ப்பு!
ஆணின்
கைகளில் அமர்ந்த பூ அது அன்பின் அரவணைப்பு!
செடியினில் பூத்த பூ அன்னம்
கொடியினில்
பூத்த பூ இதயத்தினை வருடும் வண்ணம்.
மரத்தினில்
பூத்த பூ பூச்சொரிதல் நடத்தும் புன்னகை மன்றம்!
நந்தவனத்தில்
பூத்த பூ இறைவனின் உள்ளம்!
கடையில்
விற்பனைக்கு வந்த பூ காசு கொடுத்தால் கிடைக்கின்ற மயக்கும் இன்பம்.
பூக்களுக்குத்தான்
எத்தனை எத்தனை ஆவல்?
அன்னல்
காந்தியின் கள்ளமில்லா புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது
இன்றைய
அரசியல் வாதியின் பொய்மை கண்டு பூக்களும் நடு நடுங்கியது
அவனது
கழுத்தில் மாலையாய் விழுந்த மறுகணமே ஏனோ வாடி வதங்கியது
பூக்களுக்குக்
கூட வந்து விட்டதா மனிதப் புத்தி?
மாலையின்
மயக்கும் வண்ணத்தினை சாமந்திப் பூ சாமார்த்தியமாய் திருடியது.
ரோஜாவின்
சிவந்த மேனி சில அழகுப் பெண்களின் மேனியை எனோ ஒத்திருந்தது.
மல்லிகையோ..
மனம் திறந்த மனிதச் சிரிப்பிலிருந்து வார்த்து
எடுக்கப் பட்டு
மின்னல்
போல் பளிச்சிட்டு மின்னியது.
தாமரை
மொட்டுகள் தாயின் மார்பினை தன்னுள்ளே கொண்டது
மகிழம்
பூக்கள் சிறு பிள்ளையின் சின்னச் சிரிப்பினைப் போல் மனதினை மயிலிறகு கொண்டு வருடியது.
ஆம்,
பூக்களோடு வாழாத வாழ்வு கொடியது.
பூக்கள்
பூக்கும் நாள் வரையிலும் பூமியின் நாட்கள் கவிதை போல் இனியது!
ஆக்கம்
: கவிராஜன்
(இயற் பெயர் : பரதன் உமாபதி)

கருத்துகள்
அன்னல் காந்தியின் புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது என்று கூறுவதை விட மல்லிகையும் மலர்ந்தது என்று கூறலாமே...? ஏன் கலங்கவேண்டும்?