கானகம் வாழ்ந்த மனிதனின் ‘ஒரு பக்கம்’
மலைச்சிறுமி தன்னை சுற்றி கட்டிய பட்டுப் பாவாடை போல
தக தகக்திருக்கும் மழைக் காடுகள்...
அதனூடே கால் பதித்து நடந்த காலங்கள் நலம் என இன்றும்
மனம் விசும்புகிறது
ஆங்கே ...ஆனைக்கூட்டம் வந்து போன அரவம் தெரிகிறதே!
மரங்களின் பட்டைகளை துகிலுரித்து...
சானத்தை `பொத்’ `பொதுக்’ என அதன் அருகில் இட்டு ...
ஆனைகள் அங்கு தங்கலிட்டுத்தான் சென்றுள்ளன.
அது ஒரு இறைமை தோய்ந்திருக்கும் இடை விடாத மவுனம்
இசைத்திருப்பது பறவைகள் மட்டுமே ஆங்காங்கே...
அதுவே கானகம் என்றால் மிகையல்ல!
புலியின் கால்தடத்தை உடன் மண்டியிட்டு அமர்ந்து நோக்கிய போது
எனோ புல்லரித்தது..
`உடன் இங்கிருந்து சென்று விடல் நலம்’
என மனித மனம் எச்சரித்தது
சாரல்மழை தீரல்கள் சட்டென முகம் நனைக்கும் மயாஜாலம் அங்கே நிகழ்ந்தது..
கானகம் என்னைக்கட்டிக்கொள்ள ஒரு குழந்தை போல நானும் அதனுடன் ஒட்டிக்கொண்டேன்
அந்த ஒரு நொடியில் ஏகலைவனின் திடம் பிறந்தது
பயம் என்ற பாம்பு புதருக்கு ஓடி மறைந்தது
கரடியின் பாதையில் மனிதன் போவதை கரடி கண்ணுறவில்லை
மனிதனின் பாதையில் கரடி கவிழ்ந்து நடந்து வந்ததை நானும் கண்ணுறவில்லை
முன்னே நடந்த ஆதிவாசி கை கால்ளை காற்றில் வீசி ஒலியெழுப்ப
மறு ஒலி எழுப்பி ஓடியது கரடி
கானகம் வாழ்ந்த மனிதன் கற்றுக்கொண்ட பாடத்தின் `ஒரு பக்கம் ’
இவை தானோ என ஒரு நொடி யோசித்தேன்.
நவீன் பாரதி
கருத்துகள்
நிறைய எழுதி எங்களை நிறைக்க வேண்டும்.
முதல் ‘கவிதையே’ வனத்தினுள் எடுத்துச் சென்று எங்களையும் புலித் தடம் பார்க்க வைத்த உணர்வைத் தந்தது.
கவிதை செய்திருப்பேன் கடைசி மூச்சு வரை..
தொடர்ட்டும் தாங்களின் கவி ஜாலம்....
பாரி...
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து..
திலகவதி..
நிறைய எழுதுங்க... எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாம எழுதீட்டே இருங்க...
முதல்லேயே எங்க ஊரு படத்தை போட்டு அசத்திட்டீங்க...
வாழ்த்துக்கள்....
கவிதை பற்றி வந்ததுமே குற்றம் குறை கண்டுபிடித்துக் கூறினால் நன்றாயிருக்காது. அதனால் வாழ்த்தி வரவேற்று, அடுத்த கவிதையில் கவிஞரை சந்திக்கிறேன். அதான் இப்போ ஜோதியிலே ஐக்கியமா ஆயிட்டோமில்ல. :)
தங்களைப் போன்ற தமிழ் படித்த பெண்ணின் பாராட்டு,திட்டு
இரண்டும்
மோதிரக்கயால் குட்டு!
முல்லைக்கு தேர் த்ர வேண்டாம்
கவிதைக்கு கைதட்டு அட அது போதும்!
ஒரு நல்ல மாணவனை பாராட்டுவது போல இருந்தது உங்கள் வார்த்தைகள்
நன்றி
காட்டாறு போல வருவது கவிதை..
உங்கள் விமர்சனம் எனக்கு பொக்கிஷம்
You are welcome
வருக வருக - வலயுலகத்திற்கு வருக
சிந்தனை அருமை - கற்பனை அருமை - காடுகளில் புகுந்து யானை புலி கரடி - என ஆய்ந்து - ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கையினை நினைத்து - ஒரு கவிதை -அற்புதம்
நன்று நன்று - மேன் மேலும் எழுத நல்வாழ்த்துகள் நவீன் பாரதி
நட்புடன் சீனா