இடுகைகள்

தத்துவத்தினை விட மிகும்... தாயன்பே இதுவென்றால் தகும்!

படம்
வானம் சொல்லும் வந்தனம் வான வீரன் பூசிக்கொண்டான் மார்பில் சந்தனம் கண்கள் காணும் சித்திரம் களவு போயினும் இது நெஞ்சுக்குள் பத்திரம்!   நித்தம் தந்திடும் வரம் புத்தனைப் போல் பேரன்பின் குணம் தத்துவத்தினை விட மிகும் தாயன்பே இதுவென்றால் தகும்!   இது காதலியின் வண்ணப் புருவமா? வாழ்வில் வந்துவிட்டு போய்விடுகின்ற இளமைப் பருவமா? வானவில்லுக்கும், பூக்களுக்கும் தூரத்துச் சொந்தமா? வண்ணங்கள் கொண்ட நெருக்கமான பந்தமா?   இது வானவில்லென்றால் ‘அன்பே’ இதுவெய்த அம்பெனலாம் கவிதைகளும் சொல்ல முடியாத கலைத்திறம் வானச்சுவடியில் எழுதி வைத்த வண்ணங்களின் சரித்திரம் நல்ல நண்பனைப் போல் வேண்டும் போது துணை வரும் பின்னர் சொல்லாமல் விடைபெறும்! -கவிராஜன்  

சித்திரை நிலவு போல் இதம்!!

படம்
    காதலின் கலை முகம் ஓவியப் பாவை போல் நலம்! யமுனை நதிக்கரைகளில் இந்த அன்பின் தவம் உலகம் வந்து தரிசிக்கும் உன்னதம்.   சித்திரை நிலவு போல் இதம் புத்தனின் கருணை போல் பதம் காதலை சித்திரமாய் வரைந்தால் ... அதனைக் கட்டிடமாய் சமைத்தால் இப்படித்தான் இருக்குமெனச் சொல்கிறது மனம்!   வித்தகரும் வியக்கும் விதம் புத்தழகாய் நித்தம் தோன்றும் உளம் உண்மைக் காதலுக்கு இது உருவகம் புத்தகத்தில் இல்லாத காவியமாய் இது நிலை பெறும்!   முத்தழகு போன்ற முகம் தாஜ்மஹால் மட்டும் அன்றே இருந்திருந்தால் கங்கை கொண்ட சோழன் அதன் பேரழகில்  மயங்கி யமுனை கொண்ட சோழன் ஆகியிருப்பான்.   காதலைப் பெண் முன் மொழிவதில்லை அதனை வழி மொழிகிறாள்…. தாஜ்மஹால் அதனை மறு மொழிகின்றது. -கவிராஜன்                                          

பூக்கள் பூத்த மரங்கள் புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு!

படம்
    இலைகள் படபடக்கும் இன்பம் வானுக்கும் பூமிக்கும் பாலம் அமைத்திடும் நித்தம் பறவைகள் வந்து தங்கும் முற்றம்! இங்கிருந்துதான் இன்னிசைக் கச்சேரி காலையும், மாலையும். துயிலெழுப்பும் சங்கீதச் சத்தம்!   பூக்கள் பூத்த மரங்கள் … புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு! தென்றல் காற்றில் மெல்ல அசையும் மரங்கள்… நண்பன் ஒருவன் ஆமோதித்து தலையசைப்பது போன்ற நினைவு,     சூரிய ஒளிதனை தன் இலைக்கரங்களில் வாங்கி பருகும் நீயும், நானும் அருந்த இன்பக் கனிகளை அருளும்!   அன்பாய் வளர்ந்த ஆலமரம், அரசமரம் ஆகிவிடுகிறது சட்டென ஒரு பேருந்து நிறுத்தம். புயலினை எதிர்த்து போரிட்ட மரங்களின் முகங்களில் சாய்ந்து விட்ட மரங்களை நினைத்து  சின்ன வருத்தம்!   விண்ணை முட்டி வளர்ந்தாலும் தன் மடியில் வந்து அமரும் களைத்த பாதசாரிக்கும்  கவரி வீசும்! உழைத்துக் களைத்த கால்கள் நடந்து போகும் பாதையில் .. இவை வண்ணப் பூக்களை அள்ளி அள்ளி வீசும்!   ஆக்கம்: கவிராஜன்                   ...

அன்னல் காந்தியின் புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது!!

படம்
    பூத்துக் குலுங்கும் பூக்கள் போடுவதோ புன்னகை மந்திரம்!! அவை ஒயாத அலையடிக்கும்   அன்பின் வாசனை! தென்றலுக்கு தலையாட்டும் பூக்கள் அழகின் யோசனை! பூவினங்கள்... காலைப் பெண்ணின் சலிக்காத கருணை உணர்த்தும் . அன்பின், காதலின் பெருமை! அடேயப்பா.. பூவுக்குத் தான்   பொழுதெல்லாம் எத்தனை எத்தனை வேலைகள்? ஒற்றைப் பூ   காதலின் துடிப்பு !   மாலையாக மாறிவிட்ட பூக்கள்   பெற்றுத் தரும் எவருக்கும் மதிப்பு பெண்ணின் கூந்தலில் அமர்ந்த பூவோ பேரன்பின் சிலிர்ப்பு! ஆணின் கைகளில் அமர்ந்த பூ   அது அன்பின் அரவணைப்பு!   செடியினில் பூத்த பூ அன்னம் கொடியினில் பூத்த பூ   இதயத்தினை வருடும் வண்ணம். மரத்தினில் பூத்த பூ பூச்சொரிதல்   நடத்தும் புன்னகை மன்றம்! நந்தவனத்தில் பூத்த பூ இறைவனின் உள்ளம்! கடையில் விற்பனைக்கு வந்த பூ காசு கொடுத்தால் கிடைக்கின்ற மயக்கும் இன்பம்.   பூக்களுக்குத்தான் எத்தனை எத்தனை ஆவல்? பண்டித  நேருவின் கோட்டுப் பொத்தானில் அமர்ந்த பூ  அதுவும்    தேச  விடுதலையை விரும்பியது அன்னல் ...

அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்!

படம்
வண்ண நீரினை சுமந்து செல்லும் வானூரின் வைகை இதயத்தின் ஓளிந்திருக்கும் காதலை… வரைந்து பார்த்தால் கிடைத்திடும் இப்படியொரு இனிமை… இளமை… இது அறிஞனின் வார்த்தைகள் போல் ஆயிரம் முகம் காட்டும்! கவிஞனின் வார்த்தைகள் போல் ஒளிந்து மறைந்து பின் தோன்றி   சுகம் காட்டும்! இது இறைவன் எனும் புலவன் எழுதிய ஏழு வரி திருக்குறள்! பூக்களின் அழகினை புடம் போட்டுச் செய்த ஆகாய அருள்! இது பறந்து செல்லும் ஓரு தேவ பறவையின் ஆனந்தச் சிறகு அதனால்தான்… சில கணங்களிலேயே காணாமல் போய் விடுகிறது! இது மறந்து போய் விடாத பால்ய நினைவுகள் அதனால்தான் … எப்போதும் வண்ணங்களாகவே காட்சியளிக்கிறது! இது அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்! இது புன்னகை மாறாத தேவ உதடுகளின் ஆனந்தச் சொல்! காலகாலமாய் காட்சிக்கு வரும் களிப்பான நாடகம் எழுதி மேடையேற்றியவன் யார் என்பது பூடகம்! இது பூக்கள் வண்ணங்களைக் கற்றுக் கொண்ட ஆசிரியன் வானில் வந்து நின்ற பொழுதில் பூமியெங்கும் அன்பின் பூச்சொரியும் ஆனந்தன் ஆக்கம்: கவிராஜன்

காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்!

படம்
அன்பின் விழாக்கோலம்! காதலைக் கற்றுத்தரும் நித்ய பாடம்... காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்! சோலைகள் என்பன.. பூமியில் ஆங்கே திட்டுத்திட்டாய் தெறித்திருக்கும் சொர்க்க லோகம்! இயற்கையின் தேசத்தினை ஆண்டு வருபவள் இந்த இளவரசி! இவை செடிகள் பெற்ற ஞானம் அன்பினை அனுதினமும் வளர்க்கும் இந்த யாகம்! உயர்ந்த மரங்களில் பூத்திருக்கும் பூக்கள் இன்னொரு வானவில்லாய் தோன்றும் ஒற்றைப் பூக்கள் குறுநகை என்றால்.. கொத்தாய் மலர்ந்த மலர்கள் வளர்ந்து கொண்டே போகும் புன்னகை! பெண்களும் தாம் வேண்டிப் பெற வேண்டிய அழகினைப் பெற்றதால்தான் பூக்களை   கூந்தலில் அணிந்து மகிழ்கின்றனர் இவை கடைத்தெருவுக்கு வந்தாலும்.. கலைச்செறுக்குள்ள கவிஞனைப் போல தன்னை வித்தியாசப் படுத்திக்கொள்ளும் வாசனை என்ற கண்ணுக்கு தெரியாத விளம்பரப் பலகையினை இவை கடைத்தெருவெங்கும் வைத்து விடும் ஆக்கம்: கவிராஜன்

புரளி

படம்
‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில் ஏன் இத்தனை தீமைகள்?’ இறைவன் பதிலிறுத்தான்: ‘உலகம் என்னில் இருக்கிறது; உலகத்தில் நான் இல்லை’ ‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர் ‘உலகமும் மனிதனும் எமது படைப்பு; கற்பிதமும் சதியுமாக அவன் உருவாக்கிய உலகம், அவனது படைப்பு! அழியா நிசமொன்று இது போல உம்மால் சொல்ல ஆகுமா? தலைவன் வினவ யான் செப்பினேன்: மனிதன் உருவாக்கிய புது உலகிலே ... ‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன; புரளிகளினுள் ஆள் இல்லை’ எங்குமே இல்லை! ஆக்கம்: கவிஞர். புதுயுகன்