இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சித்திரை நிலவு போல் இதம்!!

படம்
    காதலின் கலை முகம் ஓவியப் பாவை போல் நலம்! யமுனை நதிக்கரைகளில் இந்த அன்பின் தவம் உலகம் வந்து தரிசிக்கும் உன்னதம்.   சித்திரை நிலவு போல் இதம் புத்தனின் கருணை போல் பதம் காதலை சித்திரமாய் வரைந்தால் ... அதனைக் கட்டிடமாய் சமைத்தால் இப்படித்தான் இருக்குமெனச் சொல்கிறது மனம்!   வித்தகரும் வியக்கும் விதம் புத்தழகாய் நித்தம் தோன்றும் உளம் உண்மைக் காதலுக்கு இது உருவகம் புத்தகத்தில் இல்லாத காவியமாய் இது நிலை பெறும்!   முத்தழகு போன்ற முகம் தாஜ்மஹால் மட்டும் அன்றே இருந்திருந்தால் கங்கை கொண்ட சோழன் அதன் பேரழகில்  மயங்கி யமுனை கொண்ட சோழன் ஆகியிருப்பான்.   காதலைப் பெண் முன் மொழிவதில்லை அதனை வழி மொழிகிறாள்…. தாஜ்மஹால் அதனை மறு மொழிகின்றது. -கவிராஜன்