தத்துவத்தினை விட மிகும்... தாயன்பே இதுவென்றால் தகும்!
வானம் சொல்லும் வந்தனம் வான வீரன் பூசிக்கொண்டான் மார்பில் சந்தனம் கண்கள் காணும் சித்திரம் களவு போயினும் இது நெஞ்சுக்குள் பத்திரம்! நித்தம் தந்திடும் வரம் புத்தனைப் போல் பேரன்பின் குணம் தத்துவத்தினை விட மிகும் தாயன்பே இதுவென்றால் தகும்! இது காதலியின் வண்ணப் புருவமா? வாழ்வில் வந்துவிட்டு போய்விடுகின்ற இளமைப் பருவமா? வானவில்லுக்கும், பூக்களுக்கும் தூரத்துச் சொந்தமா? வண்ணங்கள் கொண்ட நெருக்கமான பந்தமா? இது வானவில்லென்றால் ‘அன்பே’ இதுவெய்த அம்பெனலாம் கவிதைகளும் சொல்ல முடியாத கலைத்திறம் வானச்சுவடியில் எழுதி வைத்த வண்ணங்களின் சரித்திரம் நல்ல நண்பனைப் போல் வேண்டும் போது துணை வரும் பின்னர் சொல்லாமல் விடைபெறும்! -கவிராஜன்