இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரல் நீள ஹிட்லர்

படம்
புகைத்துக் கொல்லும் `நான்கு அங்குல’ தீவிரவாதி.. புற்று நோயின் அழகிய அந்தரங்க காரியதரிசி வெள்ளை உடுத்தி வரும் இவள்.. உண்மையில்  உயிர்களைக் கொள்ளையிடும் ச (ர)ம்பல்  கொள்ளைக்காரி! உதட்டளவில் மட்டும் உறவாடிக் கெடுக்கும் ஒரு போலி நண்பனை ஒத்தவள் இந்த மனப்புகைச்சல் பேர்வழி விரல் இடுக்கில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் இந்த`விலை மகள்` இளைஞனின் உதடுகளை முத்தமிட்டு,,முத்தமிட்டு தரும் சுகம் ஒரு விலைமாதுவின் படுக்கையறையில் கிடைக்கும் அற்ப சுகத்தினை ஒத்தது இளைஞனே... நீ உற்சாகமாய் உறிஞ்சி உள்ளிழுத்துச் சுவைக்கும் நிகோடின் சிறுக சிறுக... உன் உயிர் பருகும் கொடிய விஷம் என்பதை நீ அறிவாயா..? ஆம்... சுவாச மண்டலத்தை சுக்கு நூறாய் உடைத்து விடும் வக்கிர புத்திக்காரன் இந்த சிகரெட்!. ஒரு இனிய நண்பனைப்போல தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உறவாடும் இந்த 'விரல் நீள ஹிட்லர்'. உன் மேல் படிப்படியாய் ஆதிக்கம் செலுத்தி உன்னை அழித்து விடும் ஓர் சர்வாதிகாரி! மனிதன் புகைத்து எரிந்த ஒவ்வொரு சிகரெட்டும் அவனது மொத்...