இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கானகம் வாழ்ந்த மனிதனின் ‘ஒரு பக்கம்’

படம்
மலைச்சிறுமி தன்னை சுற்றி கட்டிய பட்டுப் பாவாடை போல தக தகக்திருக்கும் மழைக் காடுகள்... அதனூடே கால் பதித்து நடந்த காலங்கள் நலம் என இன்றும் மனம் விசும்புகிறது ஆங்கே ...ஆனைக்கூட்டம் வந்து போன அரவம் தெரிகிறதே! மரங்களின் பட்டைகளை துகிலுரித்து... சானத்தை `பொத்’ `பொதுக்’ என அதன் அருகில் இட்டு ... ஆனைகள் அங்கு தங்கலிட்டுத்தான் சென்றுள்ளன. அது ஒரு இறைமை தோய்ந்திருக்கும் இடை விடாத மவுனம் இசைத்திருப்பது பறவைகள் மட்டுமே ஆங்காங்கே... அதுவே கானகம் என்றால் மிகையல்ல! புலியின் கால்தடத்தை உடன் மண்டியிட்டு அமர்ந்து நோக்கிய போது எனோ புல்லரித்தது.. `உடன் இங்கிருந்து சென்று விடல் நலம்’ என மனித மனம் எச்சரித்தது சாரல்மழை தீரல்கள் சட்டென முகம் நனைக்கும் மயாஜாலம் அங்கே நிகழ்ந்தது.. கானகம் என்னைக்கட்டிக்கொள்ள ஒரு குழந்தை போல நானும் அதனுடன் ஒட்டிக்கொண்டேன் அந்த ஒரு நொடியில் ஏகலைவனின் திடம் பிறந்தது பயம் என்ற பாம்பு புதருக்கு ஓடி மறைந்தது கரடியின் பாதையில் மனிதன் போவதை கரடி கண்ணுறவில்லை மனிதனின் பாதையில் கரடி கவிழ்ந்து நடந்து வந்ததை நானும் கண்ணுறவில்லை முன்னே நடந்த ஆதிவாசி கை கால்ளை காற்றில் வீசி ஒலியெழுப்ப மறு ஒல...